சென்னை, ஜன.27:வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்தில் பெண்களை படம் பிடித்துக்கொண்டிருந்த கால் டாக்சி டிரைவரை பெண்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை எச்சரித்த பிறகு போலீசார் நள்ளிரவில் விடுவித்தனர்.

மீனம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் கால் டாக்சி டிரைவராக இருக்கிறார். நேற்று வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்தில் இங்கும் அங்கும் சென்று படம்பிடித்துக் கொண்டிருந்தார். குறிப்பாக ரெயில் நிலையத்திற்கு வரும் பெண்களை படம் பிடித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதை கவனித்த பெண்கள் அவரிடம் இது குறித்து கேட்டனர். பின்னர் பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவரை வடபழனி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரது செல்போனை வாங்கி ஆய்வு செய்தபோது வெறும் செல்பி படங்களை எடுத்து வைத்திருந்ததாக தெரியவந்தது.இதையடுத்து கடும் எச்சரிக்கைக்குப் பிறகு இரவு 10 மணியளவில் அவரை விடுவித்தனர்.மெட்ரோ ரெயில் நிலையத்தில் நேற்று நடைபெற்ற இச்சம்பவம் பயணிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மெட்ரோ கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரெயில் நிலையங் களில் தீவிர கண்காணிப்பை மேற் கொள்ளுமாறும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.