புதுடெல்லி, ஜன.27:ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சா மீதான ஊழல் புகாரை விசாரித்து வந்த சிபிஐ உயர் அதிகாரி சுதான்சு தார் மிஸ்ரா என்பவர் டெல்லியிலிருந்து ராஞ்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

சந்தா கோச்சா வங்கியின் தலைவராக 2012-ல் இருந்த காலத்தில் வீடியோகான் நிறுவனத் துக்கு ரூ.3,250 கோடி கடன் அனுமதித்ததில் முறைகேடு நடைபெற்ற வழக்கைத இந்த அதிகாரி விசாரித்து எப்ஐஆர் பதிவு செய்தார்.

சிபிஐயின் இந்த நடவடிக்கை அதிதீவிர செயல்பாடு என்று நீவார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அதிகாரி மிஸ்ரா ராஞ்சியில் உள்ள சிபிஐயின் பொருளாதார புகார் பிரிவுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.