டேராடூன், ஜன.28:உத்தரகாண்ட் மாநிலத்தில் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரகாண்டின் சம்பவத் மாவட்டத்தில், இறந்த ஒருவரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. சுமார் 20 பேர் ஒரு வாகனத்தில் இடுகாட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். திடீரென அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது.

இதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் பலியாகினர். 12 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் சிலரது உடல்கள் மீட்கப்படுமென காவல்துறை தெரிவித்துள்ளது.