சென்னை, ஜன.28: கட்அவுட்டிற்கு அண்டா, அண்டாவாக பாலாபிஷேகம் செய்யுங்கள் என்று கூறியதற்காக நடிகர் சிம்பு பகீரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டார். தான் கூறிய விஷயம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

கட்அவுட் கட்டும்போது மேலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த ரசிகரின் குடும்பத்தினரை இன்று தேனாம்பேட்டையில் நடிகர் சிம்பு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதன் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

நான் ஒரு விஷயத்தை பாசிட்டிவாக சொன்னால் அது பெரிதாக வருவதில்லை. அதையே நெகட்டிவாக சொல்லும்போது உடனே பெரிய அளவில் சென்றடைகிறது. கட்அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்தவற்கு பதில் தாய் தந்தைக்கு புடவை, சட்டை எடுத்து கொடுங்கள் என்று நான் கூறினேன்.

அது சென்றடையவில்லை. அதன்பிறகு என் கட்அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்து படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு அண்டாவில் பால் காய்ச்சி கொடுங்கள் என்று சொன்ன விஷயம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் கூறியதை நான் மறவாதவன். நான் சொன்னதை மாற்றி கூறவில்லை. மாற்றத்திற்காக கூறுகிறேன். நான்
சொன்ன விஷயம் தவறாக தெரிந்தால் அதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

கட்அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்யும் போது தவறி விழுந்து உயிரிழந்த ரசிகரின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளேன். என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் இனிமேல் கட்அட்டிற்கு பாலூற்றும் கலாச்சாரத்தில் ஈடுபட வேண்டாம்.இவ்வாறு நடிகர் சிம்பு கூறினார்.