மவுன்ட் மவுங்கனுயி, ஜன.28: நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ஹர்திக் பாண்டயா பிடித்த கேட்ச் அபாரமானது.

பெண்கள் குறித்து இழிவாக பேசிய சர்ச்சைக்குபின், அணிக்கு திரும்பியுள்ள இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் அடித்த பந்தை பறந்து டைவ் அடித்து கேட்ச் பிடித்து சிறப்பான கம்பேக் கொடுத்தார்.

சாஹல் வீசிய பந்தை வில்லியம்சன் அடிக்க, மிட் விக்கெட் திசையில் நின்ற ஹர்திக் பாண்டியா, கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்து சென்று கேட்ச் பிடித்தார். ஹர்திக்கின் இந்த டைவ் கேட்ச்சால் 28 ரன்களிலேயே கேப்டன் வில்லியம்சன் நடையை கட்டினார்.