பாண்டியராஜன் மகன் ப்ரித்வி நடிக்கும் ‘காதல் முன்னேற்ற கழகம்’

சினிமா

ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன் சார்பில் மலர்க்கொடி முருகன் தயாரித்துள்ள படம் ‘காதல் முன்னேற்ற கழகம்’. இதில் ப்ரித்விராஜன் கதாநாயகனாக நடிக்கிறார்.

நாயகியாக சாந்தினி நடிக்கிறார். இவர்களுடன் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், நாதஸ்வரம் முனிஸ்ராஜா, அமீர் ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவசேனாதிபதி நடித்துள்ளார்.

படத்திற்கு ஹாரிஸ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் அர்ஸ் எடிட்டிங் செய்கிறார். பிரகதீஸ்வரன் கலை அமைக்க கதை, திரைக்கதை, வசனம் எழுதி மாணிக் சத்யா இயக்கி உள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பாண்டியராஜன், தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், நடிகர் ஆரி, தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.