சென்னை, ஜன.29: ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.25 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு ஜனவரி 28-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.2,922-க்கும், பவுன் ரூ.23,376-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்படி ஓராண்டில் பவுனுக்கு ரூ.1,696 விலை அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகமாக காணப்பட்டது. சென்னையில் நேற்று கிராமுக்கு ரூ.6 அதிகரித்து ரூ.3,127 ஆனது. அதன் மூலம் ஒரு சவரன் தங்கம் ரூ.25 ஆயிரத்தைத் தாண்டி, ரூ.25,016-க்கு விற்பனை ஆனது இன்று கிராமுக்கு மேலும் ரூ.7 அதிகரித்து ரூ. 3,134 ஆக இருந்தது. சவரன் ரூ.25,072-க்கு விற்பனை ஆனது.

தங்கம் விலை ரூ.25 ஆயிரத்தை கடப்பது வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த காரணங்களால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் ரூ.25 ஆயிரத்தை கடந்துள்ளது.