போபால், ஜன.29: மத்தியப் பிரதேசத்தில் சரணாலயம் ஒன்றில் உள்ள பெண் புலி, தனது 8-வது பிரசவத்தில் மேலும் நான்கு குட்டிகளை ஈன்று 30 குட்டிகளுக்கு தாயாகி உள்ளது.  புகழ்பெற்ற பெஞ்ச் புலிகள்
சரணாலயத்தில், பெண் புலி கொல்லாவாலி நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது. இதனை அங்குவரும் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். கொல்லாவாலிக்கு இது 8-வது பிரசவம் ஆகும். இதுவரை 30 குட்டிகளை ஈன்று அழிந்துவரும் புலிகள் எண்ணிக்கையை அழியவிடாமல் காத்துக்கொண்டிருக்கிறது இந்த பெண் புலி.

பரிமாதா என்ற புலி ஈன்ற நான்கு புலிக்குட்டிகளில் ஒன்று இந்த கொல்லார்வாலி. பரிமாதா பிபிசி தொலைக்காட்சி எடுத்த புலிகள் குறித்த ஆவணப்படத்தில் நடித்த புலியாகும்.
இது தற்போது ஈன்றுள்ள நான்கு குட்டிகள் ஆரோக்கியமாக உள்ளன என வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.