பகோரா, ஜன.30:ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் தீவில் மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஒரு கிராமத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது. அருகிலிருந்த ஒரு குடிலுக்குள் அவர்கள் தஞ்சமடைந்தனர்.

அப்போது கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்துடனும் இடியோசையுட னும் தோன்றிய மின்னல் தாக்கி மூன்று வயது குழந்தை உள்பட 6 பேர் உடல் கருகி பலியானார்கள்.

மேலும் 8 பேர் உடல் கருகிய நிலையில் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மடகாஸ்கர் தீவில் மின்னல் தாக்குதல் அடிக்கடி நிகழ்வு வழக்கமான ஒன்று என அதிகாரிகள் தெரிவித்தனர்.