சென்னை, ஜன.30: கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தென் இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். இதில் கமல் ஜோடியாக காஜல்அகர்வால் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நெடுமுடிவேணு, சித்தார்த் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தியன் தாத்தா கெட்டப்புக்காக ஹாலிவுட்டில் இருந்து மேக்அப் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு கமலுக்கு மேக்அப் போடப்பட்டு கடந்த 18-ம் தேதி ஷýட்டிங் தொடங்கியது.

இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை பார்த்த இயக்குனர் ஷங்கருக்கு திருப்தி ஏற்படாததால் மேக்அப்பை இன்னும் மெருகேற்றும் படி கூறியுள்ளார். இதனால் படப்பிடிப்பை 10 நாட்களுக்கு நிறுத்தி உள்ளார். இதனால் நடிகர் கமல்ஹாசன் தற்போது கட்சி நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். மீண்டும் பிப்ரவரி முதல்வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.