தொடரை வெல்ல பாக்.,-தென்னாப்பிரிக்கா  பலப்பரீட்சை

விளையாட்டு

கேப்டவுன். ஜன.30:தொடரை வெல்லப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான்-தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

தென்னாப்பிரிக்காவிற்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதுவரை முடிந்த 4 போட்டிகளில், இரு அணிகளும் தலா 2-ல் வெற்றி கண்டு சமநிலையில் உள்ளன.

இந்த நிலையில், தொடரை வெல்லப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கேப்டவுனில் இன்று மாலை 4.30 மணியளவில் தொடங்கவுள்ளது. சொந்த மண்ணில் தோல்வியடைவதை தவிர்க்க தென்னாப்பிரிக்க அணி கூடுதல் மெனக்கெடலுடன் களமிறங்கவுள்ளது. அதேசமயம், தொடரை வெல்ல பாகிஸ்தான் அணியும் மல்லுக்கட்டும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது