சென்னை, ஜன.30:பல்லாவரத்தில் உள்ள அடகு கடைக்காரரிடம் போலி தங்க காசுகளை கொடுத்து ரூ. 40 லட்சம் மோசடி செய்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 4பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்தசம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் நவரத்தினமால் (வயது 52).இவர் சென்னை பல்லாவரத்தில் நகைமற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு 4பேர் வந்து அவரிடம் நாங்கள் ஜெய்ப்பூரிலிருந்து வருகிறோம் என்றுகூறி அறிமுகப்படுத்தி கொண்டனர்.

பின்னர் பழக்கத்தில் தங்களிடம் உள்ள தங்க காசுகளை கொடுத்து. ரூ40லட்சம் பெற்றுசென்றுள்ளனர். பின்னர் நகைகளை சோதனை செய்த போது அனைத்தும் போலி தங்க காசுகள் என்பது தெரியவந்தது. இதில்அதிர்ச்சி அடைந்த அடகு கடைக்காரர் போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் கொடுத்தனர். அவரது புகாரின்பேரில் மோசடி ஆசாமிகள் 4பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.