சென்னை, பிப்.1: தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 செய்முறை தேர்வு தொடங்கியது.

மாநிலம் முழுவதும் பள்ளிகளில் மாணவர்கள் இன்று செய்முறை தேர்வில் கலந்துகொண்டனர். பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 1-ந் தேதி முதல் தொடங்கிய மார்ச் 19-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான தேர்வு அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிளஸ்-2 செய்முறை தேர்வு இன்று தொடங்கியது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களில் இந்த செய்முறை தேர்வு நடைபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தேர்வில் கலந்து கொண்டனர். தொடர்ந்து 4 நாட்களுக்கு மற்ற பாடங்களின் செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. இதையொட்டி, பள்ளிகளில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.