புதுடெல்லி, பிப்.1:சிபிஐக்கு புதிய இயக்குனரை தேர்வு செய்வதற்காக இன்று மாலை பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மா மாற்றப்பட்டதை தொடர்ந்து ஜனவரி 10-ந் தேதி முதல் சிபிஐ தலைவரின்றி செயல்பட்டு வருகிறது. புதிய இயக்குனரை தேர்வு செய்வதற்காக கடந்த மாதம் 29-ந் தேதி பிரதமர் தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கோகாய், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். ஆனால் புதிய இயக்குனரை தேர்வு செய்வதில் ஒருமித்த முடிவு ஏற்படவில்லை.

இதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் தேர்வுக்குழுவின் கூட்டம் நடைபெறுகிறது. இதில் சிபிஐயின் புதிய இயக்குனர் தேர்வு செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.