புதுடெல்லி, பிப்.1:மத்திய பட்ஜெட்டில் சிறுவிவசாயிகளுக்கு இடுபொருள் வாங்குவதற்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக 3 தவணைகளில் செலுத்தப்படும். இதற்காக ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய அளவில் 12 லட்சம் விவசாய குடும்பங்கள் இதனால் பயனடையும்.

நிதி இலாகா பொறுப்பை வகிக்கும் மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் இன்று மக்களவை தாக்கல் செய்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சலுகை வழங்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

அதன் விவரம் வருமாறு:-

2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் உள்ள சிறிய விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நேரடி வருமான திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் படி ஒவ்வொரு ஆண்டும் சாகுபடி காலத்தில் இடுபொருட்கள் வாங்குவதற்காக விவசாயிகளுக்கு ரூ.6 கோடி மானியமாக வழங்கப்படும்.இந்த தொகை அவர்களது வங்கி கணக்கில் 3 தவணைகளாக செலுத்தப்படும்.இதற்காக பட்ஜெட்டில் ரூ.75 ஆயிரம் கோடி கொடுக்கப்படுகிறது. நாடு தழுவிய அளவில் ரூ12 ஆயிரம் கோடி விவசாய குடும்பங்கள் இதனால் பயன் அடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் ஒவ்வொரு விவசாயிக்கும் 2 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.
கடனை முறையாக செலுத்தும் விவசாயிகளுக்கு இது 5 சதவீதமாக உயர்த்தப்படும். பசு வளர்ப்பை மேம்படுத்தும் வகையில் இத்திட்டத்திற்காக ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. விவசாயிகளின் 22 வகையான விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை 50 சதவீதமாக உயர்த்தப்படும்.