சென்னை, பிப்.3:கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், முடிவானதும் அதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அண்ணா நினைவு நாளையொட்டி திருவான்மியூர் மருந்தீசுவரர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட ஓ.பன்னீர் செல்வத்திடம் கூட்டணி பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர்,கூட்டணி குறித்த பேச்சு பரம ரகசியம், முடிச்சு அவிழ்க்கப்பட்டவுடன் தெரிவிக்கப்படும்.

மாநிலக் கட்சிகள் மட்டுமின்றி, தேசியக் கட்சிகளும் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளன.ஒத்த கருத்து உள்ள கட்சிகளோடு கூட்டணி வைத்துக் கொள்வோம் என்று கூறினார்.