சென்னை, பிப்.3:சென்னை வேப்பேரியில் உள்ள வங்கி ஒன்றில் போலி ஆவணம் மூலம் ரூ 65 லட்சம் வாகன கடன் பெற்று மோசடி நடைபெற்றதாக போலீஸ்கமிஷனர் அலுவலகத்திற்கு புகார்கள் வந்தன.

அதன் பேரில் விசாரணை நடத்திய மத்தியகுற்றப்பிரிவு போலீசார், போலி ஆவணம் மூலம் கடன் பெற்று மோசடி செய்ததாக மீஞ்சூரை சேர்ந்த முருகவேல் (வயது 43), மயிலாப்பூரை சேர்ந்த வரதராஜன் (வயது 46) மற்றும் அம்பத்தூரை சேர்ந்த பசுல்லாகான் (வயது 49) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இது தொடர்பாக மேலும் 2 பேரை தேடிவருகின்றனர்.