சென்னை,பிப்.4:பெட்ரோல், டீசல் விலை இன்று குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பின் படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 16 காசுகள் குறைந்து ரூ.73.27 ஆக விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டருக்கு 10 காசுகள் குறைந்து ரூ.69.31 ஆக விற்பனையாகிறது.