சென்னை,பிப். 4:வரதட்சணை கொடுமையால் தாய் வீட்டிற்கு சென்ற பெண்ணை கணவன் வீட்டில் அனுமதிக்காததால் 11மாத கைக்குழந்தையுடன் வீட்டு முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

முகப்பேர் சக்தி தெருவைச்சேர்ந்தவர் தினேஷ் (வயது 35). இவர் தனியார் நிறுவனத்தில பணியாற்றி வருகிறார்.இவருக்கும் அம்பத்தூர் பகுதியைச்சேர்ந்த பிரமிதா (வயது 32) என்பவருக்கும் திருமணம் நடைபெற்று 11 மாதத்தில் குழந்தை உள்ளது.

பிரமிதாவுடன் அவரது கணவன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் பிரமிதா தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை பிரமிதா தன் தந்தையுடன் வந்து புகுந்த வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வரதட்சணை வாங்கி வரவில்லை என்று கூறி வீட்டிற்குள் கணவன் அனுமதிக்கவில்லையாம். செய்வதறியாமல் நின்ற அந்த பெண் தனது 11 மாத கைக்குழந்தையுடன் கணவன் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாராம்.

இதுகுறித்து தகவல்அறிந்த நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைக்குழந்தையுடன் பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.