சிவகார்த்திகேயன் படத்தில் ஹாலிவுட் கலைஞர்கள்

சினிமா

‘சீமராஜா’ படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘மிஸ்டர் லோக்கல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக, ரவிக்குமார் இயக்கும் அறிவியல் சார்ந்த படம் 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது. ஆனால், தலைப்பு இன்னும் வைக்கவில்லை.

இந்தப் படம் குறித்து இயக்குநர் ரவிக்குமார் கூறுகையில், ‘இப்படம் அறிவியல் சார்ந்த படம். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ராகுல் பிரீத் சிங் நடிக்கிறார். காமெடி நடிகர்கள் கருணாகரன், யோகி பாபு நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 24 ஏ.எம். ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.
அறிவியல் சார்ந்த கதை என்பதால், கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக உள்ளன. இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் இரவு பகலாக பணிபுரிந்து வருகிறார்கள்.

ஹாலிவுட் படங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ‘அலெக்சா எல்.எப்.’ என்ற கேமரா, இந்த படத்தில் பயன்படுத்தப்படுகிறது. படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், அரக்குவேலி ஆகிய இடங்களில் நடந்தது என்றார்.