சென்னை, பிப்.6: 14 வயதிற்குட்பட்ட சிறுமியை வீட்டு வேலைக்கு வைத்தது தொடர்பாக நடிகை பானுப்பிரியாவிடம் குழந்தைகள் காப்பக ஆணை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினார்கள்.

1990-ம் ஆண்டுகளில் பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகை பானுப்பிரியா தனது வீட்டில் வேலை செய்து வந்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக ஏற்கனவே புகார் செய்யப்பட்டு இருந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் பானுப்பிரியா வீட்டில் திருட்டு நடந்தது தெரியவந்தது. இதையடுத்து வேலை செய்து வந்த சிறுமியின் தாயாரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

இந்நிலையில், பானுப்பிரியா 14 வயதிற்கு உட்பட்ட சிறுமியை தனது வீட்டில் வேலைக்கு வைத்தது தொடர்பாக குழந்தைகள் காப்பக ஆணைய அதிகாரிகள் இன்று அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது வீட்டில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாகவும், சிறுமியை வேலைக்கு அமர்த்தியது எப்பது என்பது தொடர்பாகவும் பல்வேறு கேள்விகளை துருவி, துருவி கேட்டனர்.