ஐதராபாத், பிப்.6: தெலுங்கு டிவி நடிகை நாக ஜான்சி (வயது 21) ஐதராபாத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தெலுங்கில் டிவி தொடர்கள் சிலவற்றில் நடித்த ஜான்சி, கடந்த சில மாதங்களாக போதிய வாய்ப்பு இல்லாததால் பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வந்தார். ஐதராபாத்தில் அவர் தனியாக வசித்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இன்று காலை அவரது வீட்டிற்கு வந்த அவரது சகோதரர் துர்கா பிரசாத் பலமுறை கதவை தட்டியும் திறக்காததால் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார்.

வீட்டின் கதவை உடைத்து பார்த்து போது, வீட்டிற்குள் ஜான்சி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஜான்சி, தூரத்து உறவினரான இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், சில நாட்களாக மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காதல் தோல்வி காரணமாக மனமுடைந்து ஜான்சி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஜான்சியின் மொபைல் போனையும் கைப்பற்றி, போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.