களவானி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஓவியா. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களின் கனவு கன்னியாக மாறினார். ஓவியா ஆர்மி உருவாகும் அளவிற்கு பிரபலமானார். தற்போது 4, 5 படங்களில் பிசியாக நடித்து வரும் ஓவியா தனது படங்கள் பற்றியும், கேரக்டர்கள் பற்றியும் கூறியதாவது:-

ராகவாலாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா-3 படத்தில் நடித்து வருகிறேன். இந்த படத்தில் எனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை கொடுத்தள்ளார். கூடவே காமெடியும் சேர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து அனிதா உதிப் இயக்கத்தில் ‘90 எம்எல்’ படத்தில் நடித்து வருகிறேன். இது ஹீரோயின் செண்ட்ரிக் சப்ஜெக்ட். என்னை சுற்றியே படத்தின் கதை நகரும்.

அதேபோல் எனது நண்பர் ஆரவ் நடித்து வரும் ‘ராஜபீமா’ படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தை நரேஷ் சம்பத் இயக்கி உள்ளார். அதேபோல் சர்குணம் இயக்குனம் களவானி-2 படத்திலும் நடிக்க உள்ளேன். இது தவிர வேறுசில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இருப்பினும் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பது என முடிவு செய்துள்ளேன்.