ஐடி துணை கமிஷனர் மீது வரதட்சனை கொடுமை வழக்கு

குற்றம்

சென்னை, பிப்.6: மடிப்பாக்கம், பாரி நகரை சேர்ந்தவர் அம்பி (வயது 31). இவரது மனைவி சுலேகா (வயது 28). இவர்கள் இருவரும் காதலித்து 2014-ல் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் ஐடி பொறியாளர்களாக பணியாற்றிவந்தனர். பின்னர், இருவரும் ஐ.ஆர்.எஸ். படிப்புக்கு பயிற்சி எடுத்தனர்.

இந்த நிலையில், சுலேகா கர்ப்பம் அடைந்ததால் படிப்பை பாதியில் விட்டுவிட்டார். அம்பி, ஐ.ஆர்.எஸ். பரீட்சையில் தேர்வு பெற்று வருமான வரித்துறையில் துணை ஆணையராக நியமிக்கப்பட்டார். ஒரிசாவில் பணியாற்றிவந்த இவருக்கும், சென்னையில் இருந்த சுலேகாவிற்கும் நாளடைவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, மனைவிக்கு விவகாரத்து நோட்டீஸ் அனுப்பினார். பின்னர், இருவீட்டாரும் சமரசம் பேசி, டெல்லியில் குடும்பம் நடத்துவதற்கு அம்பி சம்மதித்தார்.

ஆனால், பேசியப்படி குடும்பம் நடத்த முன்வரவில்லை. இதையடுத்து, மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சுலேகா, கணவர் மீது புகார் அளித்தார். அதில், வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தியதாக கூறியிருந்தார். இதனடிப்படையில், அம்பி, மாமனார் முருகன், மாமியார் பேபி ராணி, நாத்தனார் மென்சா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.