நியூயார்க், பிப்.7:அமெரிக்காவில் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்ட சூட்கேசில் ஒரு பெண்ணின் சடலம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கனெக்டிகட் பகுதியைச் சேர்ந்த கிரீன்விச் என்ற இடத்தில் சாலையில் தேடுவாரின்றி ஒரு சூட்கேஸ் இருந்ததை, துப்புரவுப் பணியாளர்கள் கண்டனர். உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து சூட்கேசை ஆய்வு செய்தபோது, ஆய்வில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் இருந்ததை போலீசார் கண்டனர்.

அந்த பெண் யார் என்பது குறித்து இதுவரை அடையாளம் தெரிய வில்லை என போலீசார் கூறினர். பெண்ணின் முகத்தை வெளியிட்டு தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்குமாறு போலீ
சார் அறிவுறுத்தியுள்ளனர்.