மலை சிங்கத்தை அடித்துக்கொன்ற ஓட்டப்பந்தய வீரர்

உலகம்

வாஷிங்டன், பிப்.7:கொலராடோ பகுதியில் உள்ள 2700 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஹார்ஸ்டூத் மலைப்பகுதியில் பல வனவிலங்குகள் உள்ளன.

அந்தப் பகுதியில் ஓட்டப்பந்தய வீரர் ஒருவர் பயிற்சி மேற்கொண்டி ருந்தார். திடீரென மலைச்சிங்கம் ஒன்று அவர் மீது பாய்ந்தது. சிங்கத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாததையடுத்து, கையில் கிடைத்த கல், கட்டை ஆகியவற்றை கொண்டு அதனை தாக்கி கொன்றார். சிங்கத்தின் தாக்குதலால் ஓட்டப்பந்தய வீரருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.