புதுடெல்லி, பிப்.7:ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாகவும், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் இதற்கு உதவி செய்து லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்நிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஆஜராக வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இவ்வழக்கு விசாரணைக்கு டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று கார்த்தி சிதம்பரம் ஆஜரானார்.

2007-ல் ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீடுகள் செய்வதற்கு அனுமதி வழங்கியதில் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் கமிஷன் பெற்றதாக குற்றச்சாட்டப்பட்டது.