சென்சுரியன், பிப்.7: தென்னாப்பிரிக்கா எதிரான கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் தோல்வியடைந்த நிலையில், டி-20 தொடரையாவது வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி வென்று தொடரை வென்றது.

இந்த நிலையில், இரு அணிகள் இடையேயான கடைசி டி20 போட்டி சென்சுரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க்கில் நேற்றிரவு 9.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 168 ரன் எடுத்தது. பின்னர், களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, ஆட்டநேரமுடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 21 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி பெற்றது.