மெல்போர்ன், பிப்.7: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இரண்டு டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. பிப்ரவரி 24 முதல் மார்ச் 13-ம் தேதிவரை நடைபெற உள்ள இப்போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அணி விவரம்: ஆரோன் பின்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேட்ன்ஸ்கோம், கிளென் மேக்ஸ்வெல், ஆஷ்டன் டர்னர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் காரே (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் , நாதன் கோல்ட்டர் நைல், ஜாய் ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், ஜேசன் பெஹ்ரண்டோர்ப், நாதன் லியோன், ஆடம் சாம்பா, டி’ஆர்சி ஷோர்ட் (ஷான் மார்ஷ்-க்கு மாற்றாக).