சென்னை, பிப்.7:வரும் தேர்தலில் நோட்டாவை விட கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் அதிக ஓட்டு வாங்குமா என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார்.

வரும் மக்களவை தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை. மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என்று நேற்று கமலஹாசன் தெரிவித்திருந்தார்.

இது குறித்து அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் செய்தியாளர்களிடம் கருத்து கேட்டனர்.அவர் தனித்து போட்டியிடட்டும். அவர் நோட்டாவை விட கூடுதலாக ஓட்டு வாங்குவாரா என்று அமைச்சர் சவால் விடுத்தார்.