சென்னை, பிப்.8:சென்னை ராஜ்பவனில் அத்துமீறி நுழைந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை ராஜ்பவனில் வேலை ணயாட்கள் செல்லும் வழி உள்ளது.அங்குள்ள ஒரு கோவில் உள்ளது.

இந்த கோவில் மீது நேற்று மாலை 6.30 மணியளவில் ஒரு வாலிபர் ஏறினார். அப்போது அவர் தவறி கீழே விழுந்தார். அப்போது பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில்பாதுகாப்புபடையினர் வாலிபரை பிடித்து கிண்டியில் போலீசில் ஒப்படைத்தனர். ஏசி பாண்டியன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தியபோது பெயர் செல்வராஜ் (வயது 26) என்பதும் வந்தவாசியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

சென்னையில் கே.கே.நகர் சிவன் பார்க்கில் தங்கி ரோடு போடும் வேலை செய்து வருவதாகவும் அப்போது ராஜ்பவனில் மான்கள் அதிகமாக உள்ளது என்று சிலர் கூறியதால் மான் பிடிக்க வந்தபோது விழுந்து விட்டதாகவும் தெரிவித்தான். இதுகுறித்து போலீசார் அவனிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.