சென்னை, பிப்.8:சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2-வது மகள் சவுந்தர்யாவை கரம் பிடிக்க இருக்கும் விசாகன் வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு களை படித்ததுடன் சினிமாவிலும் கால்பதித்து இருக்கிறார்.

மேலும் படங்களில் நடிக்க அவர் விரும்புகிறார்.

ரஜினியின் 2-வது மகள் சவுந்தர்யா வின் 2-வது திருமணம் வருகிற 11-ந் தேதி போயஸ் கார்டனில் நடைபெறுகிறது. இதற்காக முக்கிய தலைவர்கள், கலைஞர்களை சந்தித்து ரஜினிகாந்த் அழைப்பிதழ் களை கொடுத்து வருகிறார்.

விசாகன் அவர்கள் குடும்பம் நடத்தும் மருந்து கம்பெனியின் செயல் இயக்குனராக செயல்படுகிறார். பிராட்போர்டு பல்கலைக்கழகம், லண்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நிர்வாகிகள் தொடர்பான பட்ட மேற்படிப்புகளை முடித்த பின்னர் தங்கள் குடும்ப நிறுவனத்தில் செயல்பட்டு வருகிறார்.

மேலைநாட்டு கல்வி மூலம் கிடைத்த தனது அனுபவத்தை பயன்படுத்தி, திட்டமிட்ட வர்த்தக அணுகுமுறை புதிய கண்டுபிடிப்புகள், வாடிக்கையாளர் நலன் உள்ளிட்ட பல்வேறு அம்
சங்களை கடைப்பிடித்து வெற்றி பெற்று வருகிறார்.

வஞ்சகர் உலகம்’ என்ற திரைப்படத்திலும் விசாகன் நடித்து இருக்கிறார். கடந்த ஆண்டு இந்த படம் வெளியானது. தொடர்ந்து நடிப்பதிலும் அவர் தமக்கு ஆர்வம் இருப்பதாக கூறியிருக்கிறார்.