ஆக்லாந்து, பிப்.8: நியூசிலாந்திற்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் அபார பந்துவீச்சால், 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்னுக்கு சுருண்டது.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், 2-வது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்த நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் அபார பந்துவீச்சால், 50 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து நியூசிலாந்து அணி தடுமாறியது.

அதிகபட்சமாக, கிராண்ட்ஹோம் மட்டும் அரைசதம் கடந்தார். இந்திய பவுலர் குர்ணல் பாண்டியாவின் பந்துவீச்சில், எதிரணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 3 பேரை வீழ்த்தினார். இந்தியாவின் புவனேஸ்வர், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தனர். இதன் மூலம் இந்தியாவுக்கு 159 ரன் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.