புதுடெல்லி, பிப்.9: ஜார்க்கண்ட் மாநிலத்தில் தங்கள் கணவருக்கு 3-வதாக நடைபெற இருந்த திருமணத்தை இரண்டு மனைவிகளும் சேர்ந்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.தான் போக முடியாததால் தனது சகோதரரை மாப்பிள்ளையாக திருமணத்திற்கு அனுப்பி வைத்த சம்பவம் பெரும் கலாட்டாவில் முடிந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச்சேர்ந்த கரீம் என்பவருக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் உள்ளனர்.கடந்த 7ஆண்டாக அவர்கள் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் அவருக்கு 3வதாக திருமணம் நடக்க இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்த 2 மனைவிகளும் சேர்ந்து காவல் துறையில் புகார்தெரிவித்தனர். பூனம் என்கிற காவல்துறை அதிகாரி விரைந்து சென்று கரீமை விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.
3வது திருமணத்திற்கு எனது தாயின் நிர்ப்பந்தம் தான் காரணம் என்று கரீம் கூறியுள்ளார். 2 மனைவிகளுடன் நான் தொடர்ந்து குடும்பம்நடத்துகிறேன் என்று அவர் போலீசாரிடம் உறுதி அளித்தார்.

இரு மனைவிகளும் இதனை ஏற்றுக்கொண்டு திரும்பினர்.இதனிடையே தான் 3வது திருமணத்திற்கு செல்ல முடியாததால் தனது சகோதரர் ரகீமை அனுப்பி வைத்து இருக்கிறார். மாப்பிள்ளை ஆள்மாறாட்டம் நடைபெற்றுள்ளதை கண்டுபிடித்த பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரை சிறைப்பிடித்தனர். திருமணத்திற்கு செலவான ரூ. 2லட்சத்தை கொடுத்தால்தான் அவர்களை விடுவிப்போம் என்று கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.