சபரிமலை நடை திறப்பு: போலீசார் மீண்டும் கட்டுப்பாடு

இந்தியா

திருவனந்தபுரம், பிப்.9: சபரிமலை ஐயப்பன் கோவில் மாசி மாத பூஜைக்காக வரும் 12-ந்தேதி நடை திறக்கும்போது, பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து பத்தனம்திட்டா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.  அதன்படி சபரிமலை கோவில் நடை 12-ந்தேதி திறக்கும்போது பக்தர்கள் அமைதியாக சென்று வழிபட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 12-ந்தேதியில் இருந்து 17-ந்தேதி வரை காலை 10 மணிக்கு மேல்தான் நிலக்கல்லில் இருந்து சன்னிதானத்திற்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. போலீஸ் கட்டுப்பாடுகளை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.