களவாணி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஓவியா. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களின் கனவு கன்னியாக மாறினார். ஓவியா ஆர்மி உருவாகும் அளவிற்கு பிரபலமானார். தற்போது ‘90 எம்எல்’ படத்தில் ஓவியா நடித்துள்ளார். இந்த படத்தை அனிதா உதிப் இயக்கி உள்ளார். சிம்பு படத்திற்கு இசையமைத்துள்ளதுடன் கவுரவ தோற்றத்தில் நடித்தும் உள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தின் டீசர் நேற்று வெளியானது.

முழுக்க முழுக்க ஆபாச உடையில் பெண்கள் மது அருந்துவதும், ஆபாச வார்த்தைகள் நிறைந்தும் உள்ளது. ஏற்கனவே இருட்டு அறையில் முரட்டு குத்து படம் அடல்ட் காமெடி படம் என்ற பெயரில் மிகுந்த ஆபாசம் நிறைந்து இருந்து குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அடல்ட் என்ற பெயரில் இன்றைய ஹைடெக் பெண்களின் நிலையை சொல்லுவதாக டீசர் அமைந்துள்ளது. இருப்பினும் இது பல பெண்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து பலர் டுவிட்டரில் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த படத்தை தொடர்ந்து ஓவியா ராகவாலாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா-3, ஆரவ் நடித்து வரும் ‘ராஜபீமா’ மற்றும் சற்குணம் இயக்கத்தில் களவாணி-2 ஆகிய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.