தமிழ் ரசிகர்களை கண்ணடிக்க வரும் பிரியா பிரகாஷ் வாரியார்

சினிமா

கண் அசைவு மூலம் ஒட்டு மொத்த இளைஞர்களையும் தன் பக்கம் சுண்டி இழுத்த மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியார். தமிழ் ரசிகர்களை கண்ணடித்து கிரங்கடிக்க வருகிறார்.
மலையாளத்தில் உமர் லுலு இயக்கிய ‘ஒரு அடார் லவ்’ படம் தமிழில் தயாராகி வருகிறது. நூரின் ஷெரிப் நாயகனாகவும், பிரியா பிரகாஷ் வாரியார் நாயகியாகவும் நடித்துள்ளனர். சினு சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய ஷான் ரஹ்மான் இசையமைக்கிறார்.

அச்சு விஜயன் எடிட்டிங் செய்ய மணிகண்டன் வசனங்களை எழுதியுள்ளார். வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி தாணு தமிழில் இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக டீசரில் இடம் பெற்றுள்ள முத்தக்காட்சி இளசுகளிடம் வைரலாகி உள்ளது. இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் வரும் 14-ம் தேதி தமிழகம் முழுவதும் வெளியாக உள்ளது.