லக்னோ,பிப்.10:உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் பாலுப்பூர் கிராமத்தில் நடைபெற்ற 13-ம் நாள் துக்கநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஏரளாமானோர் சென்றிருந்தனர். உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்களும் துக்க நிகழ்வில் பங்கேற்றனர். அன்றிரவு விருந்து வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து, தடை செய்யப்பட்ட விஷச்சாரயத்தை சிலர் அருந்தியுள்ளனர்.

இந்த சாராயத்தை குடித்த சில மணி நேரங்களில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்களை மீட்ட உறவினர்கள், உத்தரபிரதேச மாநிலம் சகாரான்பூர், பாலுப்பூர் உள்ளிட்ட மாவட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதித்தனர். ஆனால், பலரின் நிலை கவலைக்கிடமாக இருந்தது. தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கடந்த 7-ம் தேதி முதல் நேற்றிரவு வரை படிப்படியாக 34 பேர் உயிரிழந்தனர்.

மேலும், பலர் தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருப்பதால், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போதுவரை கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்திருக்கிறது.