குல்காம்,பிப்.10:தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தின் கெல்லாம் கிரமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், நேற்று இரவே பாதுகாப்பு படையினர் அந்த கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். இதனை அறிந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த என்கவுண்டரில் அப்பகுதியில் 4 பயங்கரவாதிகள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனிடையே, குல்காம் பகுதியில் வதந்திகள் பரவுவதை தடுக்க இன்று காலை முதல் மொபைல் இணைய சேவை தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க, அருகிலுள்ள கிராமங்களில் கூடுதலாக பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.