சென்னை,பிப்.10:துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுத்ததாக பல்வேறு செய்திகள் நேற்று உலா வந்தன.

இந்நிலையில், இதுகுறித்து பன்னீர் செல்வம் தமது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:டிடிவி தினகரனுக்கு நான் அழைப்பு விடுத்ததாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தவறான தகவல். 18 எம்எல்ஏக்களில் பலர் அதிமுகவில் மீண்டும் இணைய விரும்புகின்றனர். அவர்களுக்கு அழைப்பு என்று தான் கூறியிருந்தேன். உண்மைக்கு புறம்பாக பரப்பப்படும் தகவல்களை யாரும் நம்பவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.