சென்னை, பிப்.11:திமுக ஊழல் கட்சி என்றும், அந்த அழுக்கு பொதியை சுமக்க முடியாது என்றும் கூறிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை கடுமையாக தாக்கி ‘முரசொலி’யில் விமர்சனக் கட்டுரை வெளியாகி உள்ளது.

‘பூம் பூம்’காரனின் மாடு என்ன செய்து விடும் என்ற தலைப்பில் சிலந்தி எழுதிய கட்டுரையில், மூட்டைகளை சுமக்கும் பிராணிக்கு கனம் தெரியுமே தவிர எதில் என்ன இருக்கிறது என்பது தெரியாது என்று கூறப்பட்டுள்ளது.

அந்த கட்டுரையில் தெரிவிக் கப்பட்டுள்ள சில விமர்சனக் கருத்துக்கள் வருமாறு :

கட்சி துவங்கி பல மாதங்கள் தொடங்கிய பின்பு இப்போதுதான் திமுக ஊழல் கட்சியாக தெரிகிறதா? அவருக்கு தெரிகிறது. பத்மஸ்ரீ பட்டம் பெற்றபோது அப் போதைய முதலமைச்சர் கருணாநிதியை பாராட்டு விழாவுக்கு அழைத்த போதும், மருநாயகம் படப் பிடிப்பை துவக்க முதலமைச்சர் கருணாநிதியை அழைத்தபோதும் ஊழல் தெரியவில்லை. அவ்வை சண்முகியாக வேடம் கட்டி ஆசி பெற்றபோதும் ஊழல் தெரியவில்லை. ஆனால் இப்போது திடீரென திமுக ஊழல் கட்சியாக உருவெடுத்து இருக்கிறது என்றால் என்ன காரணம்?

ஆட்சியில் இருந்தபோதெல்லாம் ஊழல் கட்சியாக தோன்றாத ஒன்று, ஆட்சி அதிகாரத்தை இழந்து 7 ஆண்டுகள் முடிந்த பின் திடீரென ஊழல் கட்சியாக கமலுக்கு திமுக காட்சி அளிக்கிறது என்றால் அது அவரது சொந்த கருத்தாக இருக்க முடியுமா?

பின்னால் பிஜேபியின் அழுத்தத்தின் காரணமாக தன்னிலை மறந்து பிதற்றத் தொடங்கி உள்ளார் கலைஞானி. புலி வேட்டைக்குச் செல்பவன் இடையில் பன்றிகள் வீசும் சேற்றைப்பற்றி கவ லைப்படக்கூடாது என்று கருணாநிதி கூறியதுபோல நமது கவனத்தை திசை திருப்பும் செயலை அலட்சியப்படுத்த லட்சியத்தை எட்ட பீடு நடை போடுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.