ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் போடுவது நோபால் ஆகி விடும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் சட்டசபையில் கூறிய போது பலத்த அதிர்வலை ஏற்பட்டது.
நிதிநிலை அறிக்கை மீது திமுக உறுப்பினர் பொன்முடி பேசினார்.

பொங்கல் பரிசு ஆயிரம் ஒரு சிக்சர் என்றும், ஏழைகளுக்கு தலா இரண்டாயிரம் என்றது 2-வது சிக்சர் என்றும் அதிமுக உறுப்பினர் செம்மலை கூறியது பற்றி பொன்முடி குறிப்பிட்டார். எத்தனை சிக்சர் அடித்தாலும எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் போடும் பாலில் போல்ட் ஆகி விடுவீர்கள் என்று பொன்முடி குறிப்பிட்டார்.
அவருக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலளித்தார். எதிர்கட்சி தலைவர் போடுவது நோபால் ஆகி விடும் என்று குறிப்பிட்ட போது சபையில் உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.