ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் (எ) ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘சத்ரு’ இந்த படத்தின் கதாநாயகனரி கதிர் நடிக்கிறார். கதாநாயகியரி சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனரி நடிக்கிறார்.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, அம்ரிஷ் இசையமைக்கிறார். பிரசன்னா.ஜி.கே எடிட்டிங் செய்ய, ராஜா மேரின் கலையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி நவீன் நஞ்சுண்டான் இயக்குகிறார்.
படம் பற்றி இயக்குனர் கூறுகையில், இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படம் இது. 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் தான் கதை. ஆக்ஷன் ரொமான்ஸ் கலந்த இந்த படத்தைப் பார்த்த மைல்ஸ்டோன் மூவிஸ்டில்லிபாபு ரிலீஸ் செய்கிறார். இப்படம் மார்ச் 1-ம் தேதி திரைக்கு வர உள்ளது என்றார்.