மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் படம் ‘கள்ளபார்ட்’ அரந்த்சாமி கதா நாயகனரி நடிக்கிறார். கதா நாயகியரி ரெஜினா நடிக்கிறார். ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ், ராட்சசன் புகழ் பேபி மோனிகா நடிக்கிறார்கள். அரவிந்த்கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். வசனத்தை ஆர்.கே.எழுத, இளையராஜா கலையமைக்கிறார். திரைக்கதை, அமைத்து க.ராஜபாண்டி இயக்குகிறார்.

படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில், அரவிந்த்சாமி எந்த கேரக்டர் கொடுத்தாலும் சிறப்பரி நடிப்பவர். இதில் அதிபன் என்கிற ஹார்ட்வேர் இன்ஜீனியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கள்ள பார்ட் படம் அவருக்கு சிகரமாய் இருக்கும். ரெஜினா டான்ஸ் டீச்சர் வேடம் ஏற்றிருக்கிறார். படப்பிடிப்பு வேகமரி நடந்து வருகிறது. ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது என்றார்.