காற்றின்மொழி படத்தை தொடர்ந்து நடிகை ஜோதிகா நடிக்கும் புதிய படத்தில் ரேவதி உடன் இணைந்து நடிக்கிறார்.  2டி எண்டர்டெயிண்ட் சார்பில் ராஜசேகர் பாண்டியன் தயாரிக்கும் புதிய படத்தில் ஜோதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் முக்கிய கேரக்டரில் நடிகை ரேவதி நடிக்க உள்ளார். மேலும் யோகிபாபு, மன்சூர்அலிகான், ஆனந்த்ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இந்த படத்திற்கு எஸ்.கல்யாண் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.