சென்னை,பிப்.13:தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடுகளை போக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் பிரச்னையை போக்க தேவையான நிதி ஒதுக்கி அரசு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகையில்: தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் மிக கடுமையாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பூண்டி ஏரி, சோழவரம் ஏரி, ரெட்கில்ஸ் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய அனைத்து ஏரிகளின் நீர் மட்டும் படு பாதாளத்திற்கு போய் விட்டது. 12.2.2019 நிலவரப்படி 885 மில்லியன் கன அடி நீர் இருப்பு மட்டுமே இருக்கிறது. இதே காலகட்டத்தில் 4 ஆயிரத்து 976 மில்லியன் கன அடி நீர் இருப்பு கடந்த வருடம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 20 மாவட்டங்களில் நிலத்தடி நீர் படு மோசமாக குறைந்து விட்டதாக ஆய்வு முடிவுகள் வெளி வந்துள்ளன.சென்னை மாநகர மக்களுக்கு கிடைக் வேண்டிய மழையளவு 55 சதவீதம் குறைந்து விட்டதால் குடிநீருக்கு பெரும் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.2016-17, 2017-18 மற்றும் 2018-19 நிதி நிலை அறிக்கைககளில் மட்டும் ஏறக்குறைய 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு குடிநீர் திட்டங்களை நிறைவேற்றப் போவதாக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டது.

அதிமுக ஆட்சியில் 110 அறிவிப்புகள், டாக்டர் திரு எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா அறிவிப்புகள் என்று வெளியிடப்பட்ட ஐந்து கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களின் மதிப்பு 9 ஆயிரத்து 692 கோடி.ஆக மொத்தம் அறிவிக்கப்பட்ட இந்த 25 ஆயிரம் கோடி ரூபாய் குடிநீர் திட்டங்களின் நிலை என்ன என்று ஒரு வெள்ளை அறிக்கையை இந்த மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

குடிநீர் பஞ்சத்தின் கொடுமை மக்களை கடுமையாக பாதிக்கும் முன்பு- குறிப்பாக வருகின்ற கோடை காலத்தில் மக்களுக்கு ஏற்படப் போகும் அவதியை புரிந்து கொண்டு, இக்குடிநீர் திட்டங்களை செயல்படுத்துவதில் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதற்கு பதிலளித்து அமைச்சர் வேலுமணி பேசியதாவது: தேவையான குடிநீர் திட்டங்களை செயல்படுத்த ஆய்வு நடத்தி அரசின் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கபப்ட்டு வருகிறது. மாநிலம் முழுதும் 1 லட்சத்து 23 ஆயிரம் குடிநீர் திட்ட பணிகளை மேற்கொண்டுள்ளோம். குடிநீர் பற்றாகுறை பிரச்சனைகளை தீர்க்க மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நியமிக்கபப்ட்டுள்ளனர்

குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், லாரிகள் மூலமாக குடிநீர் விநியோகம் செய்வதற்கான திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.

2019ம் ஆண்டில் குடிநீர் பற்றாக்குறை யை போக்க 122 கோடி சென்னை குடிநீர் வாரியத்திற்கும் 36 கோடி குடிநீர் வடிகால் வாரியத்திற்கும் ஒதுக்கப்பட்டு பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. பருவமழை பொயத்தன் காரணமாக குடிநீர் பற்றாகுறை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. சீர்மிகு திட்டங்களின் கீழும் குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மதுரையில் குடி
நீர் பற்றாகுறை பிரச்சனையை போக்க நிரந்தர குடிநீர் திட்டம் செயல்படுத்தியுள்ளோம் .

கடல் நீர் குடிநீராக்கும் திட்டத்தையும் விரைந்து முடிக்க உள்ளோம். 45 ஆண்டுகள் இல்லாத வறட்சி கடந்த காலங்களில் ஏற்பட்ட போதே அதனை தமிழக அரசு சிறப்பாக கையாண்டு, குடிநீர் தட்டுப்பாட்டை போக்கியது. தற்போது சில மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது. மேலும் பல்வேறு திட்டங்கள் மூலம் டிசம்பர் 2019 வரையில் தினமும் 550 எம்எல்டி தண்ணீர் வழங்கப்படும், சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. என்றார்.