புதுடெல்லி, பிப்.14:டெல்லியில் நேற்று முன்தினம் நட்சத்திர ஓட்டல் தீப்பிடித்து எரிந்து 17 பேர் பலியான நிலையில், இன்று பேப்பர் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

டெல்லி கரோல்பாக் பகுதியில் அர்பித் பேலஸ் என்ற நட்சத்திர ஓட்டல் இயங்கி வந்தது. 4 மாடிகளை கொண்ட இந்த ஓட்டலில் கடந்த 12 ந்தேதி காலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 17 பேர் பலியானார்கள்.

இந்த நிலையில் இன்று காலை தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதியான நரைனா பகுதியில் உள்ள ஒரு பேப்பர் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது. 23 தீயணைக்கும் படை வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டன. சேதம் குறித்து இதுவரை அதிகாரப் பூர்வ தகவல் வெளியாகவில்லை.