சென்னை, பிப்.16: பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான டி.ராஜேந்தரின் இளைய மகனும், நடிகர் சிம்புவின் தம்பியுமான குறளரசன் தந்தை முன்னிலையில் முஸ்லிம் மதத்துக்கு மாறினார்.
இயக்குனர் டி.ராஜேந்தரின் இளைய மகனான குறளரசன், ஒரு சில படங்களில் நடித்துள்ள போதிலும் தற்போது இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் முஸ்லிம் மதத்தின் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக அவரது தந்தை டி.ராஜேந்தர் முன்னிலையில் அண்ணா சாலையில் உள்ள மெக்க மசூதியில் நேற்றிரவு அந்த மத முறைப்படி இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.

இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. ஏற்கனவே இசையமைப்பாளர் இளையராஜா மகன் யுவன் சங்கர் ராஜா, நடிகை சந்தோஷி ஆகியோர் முஸ்லிம் மதத்திற்கு மாறியது குறிப்பிடத்தக்கது.