சென்னை, பிப்.16: அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை 9.45 மணியளவில் சென்னை திரும்பினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார். 2-ம் கட்ட மருத்துவ சிகிச்சைக்காக கடந்த டிசம்பர் 18-ம் தேதி மீண்டும் அமெரிக்கா சென்றார். சுமார் இரண்டு மாதங்களாக அங்கேயே தங்கி சிகிச்சை பெற்றுவந்தார். தொண்டையில் ஏற்பட்ட நோய்த்தொற்று, சிறுநீரக பிரச்சினைகளுக்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சிகிச்சை முடிந்து பூரண நலமுடன் இன்று காலை விஜயகாந்த் சென்னை திரும்பினார். 2 மாத இடைவெளிக்கு பின்னர் தமிழகம் திரும்பியுள்ள விஜயகாந்த் அவர்களை வரவேற்க தேமுதிக தொண்டர்கள் காலை 7 மணி முதலே சென்னை பன்னாட்டு விமான நிலையம் முன்னதாக குவிந்தனர். ஏர்போர்ட்டில் இருந்து காரில் புறப்பட்ட விஜயகாந்த்துக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.’