புதுடெல்லி, பிப்.16: காஷ்மீரில் கடந்த 14ம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த 44 சி.ஆர்.பி.எப். வீரர்களின் உடல்கள் விமானப்படை விமானம் மூலம் டெல்லி பாலம் விமான நிலையத்துக்கு இன்று கொண்டு வரப்பட்டன.

அங்கு பிரதமர் மோடி வீரர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், முப்படை தளபதிகள், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட முக்கிய கட்சித் தலைவர்கள் வீர மரணம் அடைந்த வீரர்களின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.